background preloader

Cafekk

Facebook Twitter

Cafekanyakumari

Cafe Kanyakumari is a free Local Online Magazine which focuses on Local events, Politics, Entertainment, Travel Destinations, Local Business reviews and Social issues of Nagercoil town ,Kanyakumari and it's neighborhood. We are on a mission to Explore. Evoke. Enrich our present generation and the ones to follow. Join us as we sail through times on a journey of re-Discovering Kanyakumari!

நாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு! நாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு!

அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று உள்ளூர் திட்டக்குழுமத்துக்கும், நகராட்சி ஆணையருக்கும் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி முதல் கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன் நாகர்கோவில் கோர்ட்டு ரோடு, கே.பி.ரோடு, வெட்டூர்ணிமடம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 கட்டிடங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர். நேற்று 2-வது கட்டமாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவின்பேரில், நாகர்கோவில் உதவி கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் மேற்பார்வையில் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், நகராட்சி ஆணையர் சரவணக்குமார், என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், நகர்நல அதிகாரி கின்ஷால், வருவாய் அதிகாரி குமார்சிங் மற்றும் உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் நாகர்கோவில் நகரப்பகுதியில் அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள வீடு, கடைகளுக்கு ‘சீல்‘ வைத்தனர்.

குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் 80 வகையான பறவை இனங்கள் கண்டுபிடிப்பு! குமரி மாவட்டத்தில் குளங்கள், காயல் போன்ற நீர்நிலைகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.

குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் 80 வகையான பறவை இனங்கள் கண்டுபிடிப்பு!

வனப்பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் முடிந்த நிலையில், மூன்றாவது கட்டமாக நேற்று மீண்டும் நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இந்த கணக்கெடுப்பு பணியில் மாவட்ட வனத்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் ஆகியோர் ஈடுபட்டனர். 10 குழுக்களாக பிரிந்து சென்று இந்த கணக்கெடுப்பு பணியை அவர்கள் மேற்கொண்டனர்.

மணக்குடி காயல், புத்தளம், தேரூர், சுசீந்திரம், தத்தையார்குளம் உள்ளிட்ட குளங்கள் ஆகியவற்றில் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன. இதில் வெளிநாட்டு பறவைகளும், உள்நாட்டு பறவைகளும் ஏராளமாக கண்டறியப்பட்டன. நாகர்கோவில், பார்வதிபுரம் பாலத்தின் கீழ் போக்குவரத்து தொடங்கியது! நாகர்கோவில் நகரில் அன்றாட பிரச்சினையாக இருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பார்வதிபுரத்தில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.

நாகர்கோவில், பார்வதிபுரம் பாலத்தின் கீழ் போக்குவரத்து தொடங்கியது!

இந்த பாலம் தற்போது வாகன பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு இருப்பதால் பார்வதிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது. ஆனாலும் பாலத்தின் கீழ்பகுதியில் சாலை அமைக்கப்படாமல் அப்படியே விட்டு விட்டதால் வாகனங்கள் செல்ல இயலாத நிலை நிலவி வந்தது. இதனால் பாலத்தின் கீழ்பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் தங்கள் வாகனங்களை கொண்டு செல்ல பெய்தும் சிரமப்பட்டனர் மேலும் பார்வதிபுரம் பாலத்தின் கீழ் வாகனங்கள் செல்லாமல் இருந்ததாலும், மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததாலும் அங்குள்ள கடைகளில் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனவே பாலத்தின் கீழ் பகுதியில் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து பணிகள் முடுக்கி விடப்பட்டது. நாகர்கோவில் பல்வேறு இடங்களில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா விற்பனை கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது மதுவுக்கு இணையாக எளிதில் கிடைக்கும் போதை பொருளாக கஞ்சா மாறி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா விற்பனை

அதுவும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளது. அடிக்கடி போலீசார் கஞ்சா விற்பனையாளர்களை மடக்கி பிடித்து நடவடிக்கை மேற்கொண்டாலும் கூட, விற்பனையை முற்றிலும் தடுக்க முடியவில்லை. சாதாரணமாக ஆரம்பித்த இந்த பழக்கத்துக்கு இப்போது பல மாணவர்கள் அடிமையாகி உள்ளனர். பலர் கஞ்சா போதையில் குற்றவாளிகளாகவும் மாறி வருகிறார்கள். நாகர்கோவில் விடுதியில் கேரள திரைப்பட நடிகை ரகளை! குமரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நாகர்கோவில் துணிக்கடையில் பூட்டை உடைத்து கொள்ளை! கன்னியாகுமரி மாவட்டத்தில் சைக்கோ கொலையாளியா? - Café Kanyakumari. கன்னியாகுமரி மாவட்டம் பரகுன்று என்ற ஊரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ்.இவர் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ தேவாலயத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சைக்கோ கொலையாளியா? - Café Kanyakumari

கடந்த 28-ஆம் தேதி இவர் பணியில் இருந்த போது நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் வேட்டி மட்டும் அணிந்து கொண்டு அங்கு வந்துள்ளார். அங்கும் இங்கும் ஓடித் திரிந்த அவர், திடீரென தேவாலயம் முன் நடனமாடியுள்ளார். இதைப் பார்த்த காவலாளி சுந்தர்ராஜ், மர்மநபரை எச்சரித்துள்ளார். காவலாளியை நோக்கிச் சென்ற அந்த நபர், திடீரென அவரைத் தாக்கி கீழே தள்ளி, பின்னர் பெரிய கல்லைத் தூக்கி சுந்தர்ராஜின் வயிற்றில் போட்டுள்ளார். கோட்டார் சவேரியார் பேராயத்தில் இன்று தேர் பவனி - Café Kanyakumari. நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. 8-ஆம் நாள் திருவிழாவான இன்று மாலை தேர் பவனி நடைபெறுகிறது.

கோட்டார் சவேரியார் பேராயத்தில் இன்று தேர் பவனி - Café Kanyakumari

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. 7-ஆம் நாள் திருவிழாவான நேற்று மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. 8-ஆம் நாள் திருவிழாவான இன்று மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும், இரவு 10.30 மணிக்கு தேர் பவனியும் நடைபெறும். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார்: ஆய்வு பணி தொடங்கியது - Café Kanyakumari. நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஜனவரி மாதம் முதல் புதிய ரயில் - Café Kanyakumari. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவான நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஜனவரி மாதம் முதல் புதிய ரயில் இயக்கமுடிவு செய்து இருப்பதாக தென்னக ரயில்வே உறுதி அளித்துள்ளது.

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஜனவரி மாதம் முதல் புதிய ரயில் - Café Kanyakumari

இதனால் குமரி மாவட்ட மக்களின் கனவு நனவாகியுள்ளது.கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும், கொல்லத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்னைக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் தினமும் மாலையில் நாகர்கோவில் வழியாக சென்னைக்கு செல்கிறது. பாபர் மசூதி இடிப்பு தினம் குமரியில் பலத்த பாதுகாப்பு - Café Kanyakumari. பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.

பாபர் மசூதி இடிப்பு தினம் குமரியில் பலத்த பாதுகாப்பு - Café Kanyakumari

இதை முன்னிட்டு எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இது போல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அதாவது மாவட்டம் முழுவதிலும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வரும் 15-ஆம் தேதி பார்வதிபுரம் மேம்பாலம் மக்கள் பார்வைக்காக திறப்பு - Café Kanyakumari. நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலப்பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் மக்கள் பார் வைக்காக மேம்பாலம் வருகிற 15-ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது.

வரும் 15-ஆம் தேதி பார்வதிபுரம் மேம்பாலம் மக்கள் பார்வைக்காக திறப்பு - Café Kanyakumari

நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் இரண்டு மேம்பாலங்களும் மொத்தம் 314 கோடியில் அமைந்து வருகிறது. மார்த்தாண்டம் மேம்பாலம் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக கடந்த 10-ஆம் தேதி திறந்துவிடப்பட்டது. மேலும் சில பணிகள் அந்த பாலத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் பார்வதிபுரம் மேம்பாலப்பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போராட்டம் - Café Kanyakumari.

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் அமமுக இணைந்தார் - Café Kanyakumari. நாகர்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ.

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் அமமுக இணைந்தார் - Café Kanyakumari

நாஞ்சில் முருகேசன் இன்று தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை சந்தித்து அவரது கட்சியில் இணைந்தார். இன்று முதல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 5.20 மணிக்கு புறப்படும் - Café Kanyakumari. கன்னியாகுமரி மாவட்டத்தின் அடையாளமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கருதப்படுகிறது. ஆனால் அந்த ரயிலை மாற்று ரயிலாக ரயில்வே நிர்வாகம் பயன்படுத்தி வந்தது. முதலில் பெங்களூருவுக்கு ஐலேண்டு எக்ஸ்பிரஸ் ரயிலாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது. இதனால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தினமும் சென்னைக்கு தாமதமாக புறப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த சில மாதங்களாக தனி ரெயிலாக இயக்கப்பட்டது. சபரிமலை பிரச்சனை காரணமாக தோவாளை பூ விற்பனை சரிந்தது - Café Kanyakumari. கேரளாவில் சபரிமலை கோயில் பிரச்சனை காரணமாக ஐயப்ப பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்துவிட்டதால், தோவாளை மலர் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில், ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகளவு காணப்படும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஐயப்ப பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பூக்களை வாங்குபவர்களின் வரத்தும் குறைந்து விட்டதால், பூக்களின் விலை சரிந்து விட்டது. குமரியில் இன்று திருக்கார்த்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது - Café Kanyakumari. திருக்கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு வீடுகளின் வாசல் முன்பு பெண்கள் வண்ண கோலமிட்டும், அகல் விளக்குகள் ஏற்றியும் கார்த்திகை தீபத்திருவிழாவை கொண்டாடுகின்றனர். மேலும் பெண்கள் வீட்டு முற்றத்தில் தட்டில் பூ வைத்து நடுவே குத்துவிளக்கேற்றுகின்றனர்.

மேலும் கொழுக்கட்டை மற்றும் அப்பம் தயார் செய்து கடவுளுக்கு படைக்கின்றனர். பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கேரளாவில் அவமதிப்பு? குமரியில் பிஜேபி போராட்டம் - Café Kanyakumari. Kiwi Batmans Creates Record - Café Kanyakumari. Facebook New home video chat device launch today - Café Kanyakumari. Café Kanyakumari – Your Daily Update on Nagercoil Neighborhood.

Café Kanyakumari – Your Daily Update on Nagercoil Neighborhood. சுளீரென அடிக்கும் வெயில், கண்ணே கிறங்கும் அளவுக்கு மண்டையைப் பிளக்கும். அதில் இருந்து தப்பிக்க நாம் குடிப்பது பெப்சி, கோக் போன்ற பலவகையான பானங்களை தான். என்னதான் கூல்டிரிங்ஸ்களை குடித்தாலும் இன்னும் குடிக்க வேண்டும் என்று தோன்றாது. ஆனால் நன்னாரி சர்பத் போட்டு கொடுத்தால் கண்டிப்பாக இன்னொரு சர்பத் போடுங்க என்று கேட்பார்கள். இந்த நன்னாரி சர்பத் சுவையும்,வரலாறும் வித்தியாசமானது. அதிகப்படியான முதலீடு கொண்டு சினிமா ஹீரோ ,ஹீரோயின்களை வைத்து அசுரத்தனமான பகட்டு விளம்பரங்களை செய்து இந்தியாவில் கார்ப்ரேட் கூல்டிரிங்ஸ் கம்பெனிகள் வேரூன்றி விட்டன. Café Kanyakumari – Your Daily Update on Nagercoil Neighborhood. குமரி மாவட்டம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக இளம் வயது பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 23 பேருக்கு பன்றிக்காய்ச்சலுக்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. Café Kanyakumari – Your Daily Update on Nagercoil Neighborhood. Café Kanyakumari – Your Daily Update on Nagercoil Neighborhood. Café Kanyakumari – Your Daily Update on Nagercoil Neighborhood. Café Kanyakumari – Your Daily Update on Nagercoil Neighborhood.

Café Kanyakumari – Your Daily Update on Nagercoil Neighborhood. Café Kanyakumari – Your Daily Update on Nagercoil Neighborhood. Café Kanyakumari – Your Daily Update on Nagercoil Neighborhood. Café Kanyakumari – Your Daily Update on Nagercoil Neighborhood.